ஈரான், ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்க தடை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

துபாய் : ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.





ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. ஜன.,7 ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு சுமார் 12 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.





இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202016:25:35 IST Report Abuse
Ranjith Rajan ஸ்கெச்சு ஈரானுக்கு இல்ல. சீனாவுக்கு. யோசித்து பார்த்தா புரியும். சில மாதங்களுக்கு முந்தைய வர்த்தகப் போர்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-ஜன-202015:22:19 IST Report Abuse
மலரின் மகள் வளைகுடா பிராந்தியத்தில் ஈராக் தான் வலிமை மிகுந்த ராணுவம் கொண்டது. அமெரிக்காவால் ஈரானுக்கு பொருள் சேதத்தை விளைவிக்கலாம் ராணுவ நடவடிக்கையால், அதை விட அவர்கள் பொருளாதார தடையால் பொருளாதார சேதம் விளைவிக்கவே முயன்று ஓரளவு வெற்றியும் எதிர்பார்த்த முடிவில்லாததால் தொடர் தோல்வியும் கொண்டு, அதிபருக்கு அங்கே சிக்கல் நிகழ்ந்ததால் இப்போது பெரியண்ணன் வெளிவேஷத்தை கலைக்க வேண்டியிருந்திருக்கிறது. உலக நாடுகளுக்கு திறனையும் தெரியும் அமெரிக்காவையும் புரியும். ராணுவ நடவடிக்கையால் அதிக பொருட் சேதம் இரண்டு பக்கமும் இருக்கும். ஈரானின் என்னை கிணறுகளை அவர்களால் ஒருபோதும் கையகப்படுத்த முடியாது அமெரிக்காவால். பொருளாதார பிரச்சினைகள் உலக நாடுகள் அனைத்திற்குமே பெரியளவில் இருக்க உலக நாடுகள் அமெரிக்காவை கோபித்து கொண்டு நிர்பந்திக்கும். அந்த நிலையை அவர்களும் விரும்ப மாட்டார்கள். சில பழிக்கு பழி நடவடிக்கையுடன் இது முற்றுப்பெறும். அப்படி நடந்துவிட்டால் ஓரளவு நிம்மதி தான்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜன-202015:21:37 IST Report Abuse
Endrum Indian இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது போல் தேவையின்றி இந்தியர்கள் ஈராக் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. என்ன முஸ்லிம்களே இது ஓகேயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X