என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற போட்டி

Added : ஜன 08, 2020

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில், கோவை மண்டல அளவில், கல்லூரி என்.சி.சி., மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். இதில், 250 பேர் கலந்து கொண்டனர். உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், தடை மற்றும் தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெற்ற கல்லூரிகளுக்கு, சுழற்கோப்பை அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X