பொது செய்தி

தமிழ்நாடு

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 10ல் ஆருத்ரா

Added : ஜன 08, 2020
Advertisement

ஈரோடு: மார்கழி மாத திருவாதிரை நாளில், திருவாதிரை விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பகல் முழுவதும் சிவனடியார்கள் விரதமிருந்து, நடராஜரை வணங்குவர். கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு, நடராஜர் வீதியுலாவாக சென்று காட்சியளிப்பது, ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை அதிகாலை, 4:00 மணிக்கு பிச்சாண்டார் உற்சவம், மாலையில் பிச்சாண்டார் கோவிலுக்குள் எழுந்தருளி, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 10ல் அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பட்டு வஸ்திரம் சாத்துப்படி நடக்கிறது. அதையடுத்து நடராஜர் தரிசனம், கோவில் உள் பிரகாரம், வெளி பிரகாரம் வலம் வருதல், கும்மி, கோலாட்டம் நிகழ்வு நடக்கிறது. நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருடன் திருவீதி உலா நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு விடையாற்றி அபிஷேகம், சோமாஸ்கந்த பெருமானுக்கு ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X