மாவட்ட பஞ்., தலைவர், சேர்மன் பதவி ஒதுக்கீடு அறிவிப்பு: பதவிகளை கமுக்கமாக பிடிக்க கட்சியினர் ரெடி| Dinamalar

தமிழ்நாடு

மாவட்ட பஞ்., தலைவர், சேர்மன் பதவி ஒதுக்கீடு அறிவிப்பு: பதவிகளை 'கமுக்கமாக' பிடிக்க கட்சியினர் 'ரெடி'

Added : ஜன 08, 2020

ஈரோடு: ஈரோடு மாவட்ட பஞ்., தலைவர் பதவி, பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், 14 யூனியன்களுக்கும், சேர்மன் பதவி யாருக்கு ஒதுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, கடந்த, 6ல் பஞ்., தலைவர்கள், உறுப்பினர்கள், யூனியன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றனர். வரும், 11ல் பஞ்., தலைவர், துணை தலைவர், யூனியன் தலைவர்கள், துணை தலைவர்கள், மாவட்ட தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மாவட்ட பஞ்., கவுன்சிலர், 19 இடங்களில், 14 இடங்களை அ.தி.மு.க., கூட்டணி வென்றுள்ளதால், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்கிறது.

யூனியன் பதவி ஒதுக்கீடு: இதேபோல், 14 யூனியன்களில், எட்டு யூனியனில் அ.தி.மு.க.,வும், ஐந்தில் தி.மு.க.,வும் பெரும்பான்மை பெற்றுள்ளதால், அவ்விடங்களில் இவ்விரு கட்சியினர் தலைவராகின்றனர். கொடுமுடி யூனியன் சேர்மன் பதவி, எஸ்.சி., பெண், நம்பியூர், டி.என்.பாளையம் யூனியன்கள் எஸ்.சி., பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானிசாகர் யூனியன்கள் பொது பெண் பிரிவு, ஈரோடு, மொடக்குறிச்சி, கோபி, சத்தி, தாளவாடி யூனியன்கள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் கோபி, அம்மாபேட்டை, நம்பியூர், பவானி, மொடக்குறிச்சி, பவானிசாகர், அந்தியூர் என ஏழு யூனியன்களில், அ.தி.மு.க., கூட்டணி பதவிகளை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

தி.மு.க., வசம் 3 இடங்கள்: கொடுமுடி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம் யூனியன்களில், மெஜாரிட்டி பெற்றுள்ளதால், இவற்றில் தி.மு.க., கூட்டணி சிரமமின்றி பதவிகளை பிடிக்கிறது.

சிக்கல் எங்கே? பெருந்துறை யூனியனில், 12 கவன்சிலர்களில், அ.தி.மு.க., ஐந்து, தி.மு.க., கூட்டணி மூன்று, அ.தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களான, நான்கு சுயேச்சைகள் உள்ளனர். இதனால் இங்கு பதவியைக் கைப்பற்றுவதில், அ.தி.மு.க.,வுக்கு சிக்கலாகியுள்ளது. சுயேச்சைகளிடம் சமாதான படலம் நடக்கிறது. இது வெற்றி பெற்றால், அ.தி.மு.க., பதவியைக் கைப்பற்றும். இதேபோல் ஈரோட்டில், 6ல் தி.மு.க., - அ.தி.மு.க., தலா, மூன்று இடம் உள்ளதால், தலைவர் பதவியை அ.தி.மு.க.,வும், துணை தலைவர் பதவியை தி.மு.க.,வும் வைத்துக் கொள்ள சமரசம் பேசி வருகின்றனர்.

தாளவாடி யாருக்கு? தாளவாடியில், 10 இடங்களில், தி.மு.க., இரண்டு, மார்க் கம்யூ., இந்திய கம்யூ., காங்., தலா, ஒன்று, என ஐந்து இடங்களை பிடித்துள்ளது. அ.தி.மு.க., 1, அ.ம.மு.க., 3, சுயேச்சை 1 என உள்ளது. தி.மு.க.,வுக்கு ஒரு ஆதரவு தேவை என்பதால், சுயேச்சையை இழுப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதனால் தாளவாடியில் பதவியை பிடிக்க, தி.மு.க.,வுக்கு அதிக வாய்ப்புள்ளது.

விட்டுத்தர இருதரப்பும் தயார்: முழு மெஜாரிட்டியாக உள்ள இடங்களில், துணை தலைவர் பதவியை தி.மு.க.,- அ.தி.மு.க., வைத்து கொள்ள முடிவு செய்துள்ளது. அவ்விடத்தில் வென்றுள்ள கூட்டணி கட்சியினர், தங்களுக்கு துணை தலைவர் பதவி தேவை என பேசி வருவதால், அவர்களுக்கு விட்டுத்தர வாய்ப்புள்ளது.

மாவட்ட பஞ்., தலைவர் நவமணி? சத்தி முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி மனைவி நவமணி, மாவட்ட பஞ்., ஆறாவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். பெண்ணுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இவர் தேர்வு செய்யப்பட அதிகபட்ச வாய்ப்புள்ளது. அதேசமயம் துணை தலைவராக, 17வது வார்டு கவுன்சிலர் பழனிசாமிக்கும், வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X