பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு கிடைப்பதில் பிரச்னையா? புகார், தொடர்புக்கு மொபைல் எண் அறிவிப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

ஈரோடு: பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கம் கிடைப்பதில் பிரச்னை அல்லது தாமதம் ஏற்பட்டால், மக்கள் தொடர்பு கொள்ள, அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், அனைத்து அரிசி ரேஷன் கார்டுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய், நாளை முதல், 12ம் தேதி வரை, ரேஷன் கடைகளில் வழங்கப் படவுள்ளது. காலை, 8:30 மணி முதல் மதியம், 12:30 மணி; மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை வழங்கப்படும். கார்டில் உள்ள குடும்ப நபர்களில் ஒருவர் பெற்று கொள்ளலாம். இதில் ஏதேனும் பிரச்னை எழுந்தால், தாலுகா வாரியாக நியமிக்கப்பட்டுள்ள, மண்டல அலுவலர்களின், எண்களில் தொடர்பு கொள்ளலாம். அந்தியூர் தாலுகாவுக்கு, 94454-77855; பவானிக்கு, 73388-01258, ஈரோடுக்கு, 94450-00439, கோபிக்கு, 94450-00441, கொடுமுடிக்கு, 98435-81819, மொடக்குறிச்சிக்கு, 94450-74580, பெருந்துறைக்கு, 94450-00237, சத்தியமங்கலத்துக்கு, 94450-29461, தாளவாடிக்கு, 73387-20705, நம்பியூர் தாலுகாவுக்கு, 73387-20704 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதில்லாமல், கட்டுப்பாட்டு அறை, 0424 2252052 என்ற எண்ணிலும் விபரம் பெறலாம். இத்தகவலை, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X