பொது செய்தி

தமிழ்நாடு

வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

Added : ஜன 08, 2020
Advertisement

ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், பொங்கல் விழாவை முன்னிட்டு, பல்வேறு அலகுகள் குத்தி, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 31ம் தேதி, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, குடங்களில் தீர்த்தம் சுமந்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இவர்களுடன் அக்னி சட்டி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் பலர் சென்றனர். இதில்லாமல் பலர், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். முகத்தில் நீளமான வேல், முதுகில் காவடி அலகு, பறவை அலகு குத்தி, ஊர்வலமாக நடந்து சென்றனர். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொங்கல் விழா இன்று காலை நடக்கிறது. நாளை காலை, கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி, மலர் பல்லக்கில் அம்மனின் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டு நடக்கவுள்ளது. 10ம் தேதி இரவு, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X