பொது செய்தி

தமிழ்நாடு

2 சேர்மன் பதவிக்கு பா.ம.க., இலக்கு

Added : ஜன 08, 2020
Advertisement

பவானி: உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. இதில் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் யூனியன் கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, பா.ம.க.,வுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தியூர் யூனியனில், 16 இடங்களில், இரு கவுன்சிலர்களை பா.ம.க., பெற்றுள்ளது. அதே சமயம் தலா ஏழு இடங்களை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., பெற்றுள்ளது. எனவே பா.ம.க., ஆதரவு, அ.தி.மு.க.,வுக்கு அவசியமாகிறது. எனவே, அந்தியூரில் சேர்மன் பதவியை தங்களுக்கு ஒதுக்க, பா.ம.க.,வினர் எதிர்பார்க்கின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றது. அப்போது பா.ம.க.,வுக்கு அம்மாபேட்டை மற்றும் அந்தியூர் சேர்மன் பதவி வழங்கப்பட்டது. அதை மனதில் வைத்து, அம்மாபேட்டையிலும் சேர்மன் பதவியை, தங்களுக்கு தரவேண்டும் என்று, பா.ம.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X