பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஜன 08, 2020
Advertisement

சாலையோரம் அபாய கிணறு: வெள்ளகோவில், சொரியங்கிணத்துப்பாளையம் காலனியில் இருந்து, கள்ளமடை செல்லும் சாலையோரத்தில் தனியார் கிணறு உள்ளது. தடுப்புச்சுவர் இல்லாத நிலையில், மரம் வளர்ந்து பாதுகாப்பு வேலி போல் நிற்கிறது. பகலில் கண்ணில் தென்பட்டு சமாளித்து சென்றாலும், இரவில் அதற்கு வாய்ப்பில்லை. கால்நடைகள் வண்டி வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையாக உள்ளது. இதனால் இரவில் விபத்து அச்சம் அதிகரித்துள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.
நடக்க முடியாத நடைமேடை: ஈரோடு, ஈ.வி.என்., சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில், ஸ்டோனி பிரிட்ஜில் இருபுறமும் மக்கள் நடந்து செல்ல, நடைமேடை உள்ளது. ஆனால், பெரும்பகுதி சிதைந்து பள்ளமாகி விட்டது. நம்பி நடந்து சென்றால், எங்காவது விழுந்து காயப்பட நேரிடும். மழை காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி புலம்ப விடுகிறது. வாகனங்கள் அதிகமாக செல்லும்போது, நடைமேடையை தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் பாதசாரிகள்.

பராமரிப்பின்றி கழிப்பிடம் வீண்: நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆறு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 250 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இவர்களுக்காக பள்ளி வளாகத்தில், மைதானம் அருகே தனித்தனியே கழிப்பறை உள்ளது. முறையாக பராமரிப்பு செய்யாததால், துர்நாற்றம் வீசுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை வளாகத்தை, சுத்தம் செய்ய வேண்டும் என்பதை, சொல்லித்தான் தெரிய வேண்டுமோ?

சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு: அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், பவானி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளன. இப்பகுதியில் செல்லும் சாக்கடையில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாலித்தீன் குப்பை மிதக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கொசு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சாக்கடையை முறையாக தூர்வார வேண்டும். அதேசமயம் கடைகளில், பாலித்தீன் பை சோதனைகளிலும் ஈடுபட, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொப்புளிக்கும் சாக்கடை கழிவுநீர்: ஈரோடு, திண்டல், யு.ஆர்.சி., நகர் செல்லும் சாலையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், மூடியின் வழியாக கழிவுநீர் கொப்புளித்து வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் எழுந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இப்பகுதியில் உள்ளன. பிரதான சாலையாகவும் உள்ளதால், அடைப்பை நீக்கி கழிவுநீர் தடையின்றி செல்ல, மாநகராட்சி அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என்று, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X