சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் மீது பைக் மோதி கட்டட தொழிலாளி சாவு

Added : ஜன 08, 2020
Advertisement

மொடக்குறிச்சி: அரச்சலூர் அருகே, விபத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார். திருப்பூர், புதுக்காடு, முதல் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 65; கட்டட தொழிலாளி. கடந்த மாதம், 31ல் அரச்சலூர் அருகேயுள்ள ஓடாநிலைக்கு, கோவில் திருவிழாவுக்கு வந்தார். வடபழனியில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்கு டூவீலரில் சென்றார். அப்போது சாலையோரத்தில் நின்ற டிராக்டரின் பின் பக்கத்தில், எதிர்பாராதவிதமாக டூவீலர் மோதியது. இதில் பலத்த காயமடைமந்த அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி, நேற்று இறந்தார். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X