சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை கொலையில் ஜார்கண்ட் வாலிபர் கைது: கவுந்தப்பாடி போலீசில் 'திடுக்' வாக்குமூலம்

Added : ஜன 08, 2020
Advertisement

கோபி: கவுந்தப்பாடி அருகே தறிப்பட்டறையில், பீகார் வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்கண்ட் மாநில வாலிபரை, போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான தறிப்பட்டறை, கள்ளுக்கடை மேட்டில் உள்ளது. இதில் டர்க்கி டவல் தயாரித்து வருகிறார். ஒன்றரை ஆண்டாக, பிஹார் மாநிலத்தை சேர்ந்த நவீன்குமார், 25, சுகேந்திரகுமார் வர்மா, 28, பணிபுரிந்தனர். கடந்த, 6ல் இருவரும், பட்டறையில் துணிகள் அடுக்கி வைக்கும் குடோனில், படுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக அவர்களுடன் பணிபுரிந்த, பிஹாரை சேர்ந்த சவுரப் ரஜ்ஜன், 28, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரகுமார், 21, ஆகியோரை பிடித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரித்தனர். இதில் இருவரையும் கொலை செய்ததாக, ரவீந்திரகுமார் ஒப்புக்கொண்டார். 'கொலையுண்ட இருவரும், வேலை செய்யும்போது, பாரபட்சம் காட்டியதுடன் அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில், இரும்பு பைப்பால் இருவரையும் தாக்கி, கொலை செய்தேன்' என்று, அவர் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர். கோபி ஜே.எம்.,2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் கைதான ரவீந்திரகுமாருக்கு, திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X