உதவிக்கு சென்ற பள்ளி மாணவன் விபத்தில் உயிரை இழந்த சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவிக்கு சென்ற பள்ளி மாணவன் விபத்தில் உயிரை இழந்த சோகம்

Added : ஜன 08, 2020

பு.புளியம்பட்டி புன்செய்புளியம்பட்டி அருகே, டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில், உதவிக்கு சென்ற பள்ளி மாணவன் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.
சத்தியமங்கலத்தை அடுத்த, கடம்பூர்மலை, காடகநல்லியை சேர்ந்தவர் சிவக்குமார், 30; அவிநாசியில் ஸ்பின்னிங் மில்லில் தங்கி வேலை செய்கிறார். காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக, அதே மில்லில் தங்கி வேலை செய்யும், விருதாச்சலத்தை சேர்ந்த சாரதா என்பவரின் மகனும், ஒன்பதாம் வகுப்பு மாணவனுமான அபினேஷுடன், ஸ்பிளென்டர் பைக்கில் காடகநல்லிக்கு சென்றார். சிலிண்டரை எடுத்துக் கொண்டு, அவிநாசிக்கு நேற்று திரும்பினர். பைக்கை சிவக்குமார் ஓட்ட, பின்னால் அமர்ந்து சிலிண்டரை அபினேஷ் பிடித்துக் கொண்டு சென்றார். புன்செய்புளியம்பட்டி அடுத்த, விண்ணப்பள்ளி-புதுரோடு பஸ் நிறுத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மதியம், 1:45 மணிக்கு சென்றனர். அப்போது கோவையில் இருந்து சத்தி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிலிண்டர் உருண்டு அபினேஷ் தலைமீது விழுந்ததில், சம்பவ இடத்தில் அவர் பலியானார். லேசான காயத்துடன் சிவக்குமார் உயிர் தப்பினார். விபத்து குறித்து புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X