90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் : அமித்ஷா

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பா.ஜ.,வின் 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.



latest tamil news


பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா கூறுகையில், பா.ஜ., அளித்த 90 சதவீதம் வாக்குறுதிகளை கட்சி நிறைவேற்றி உள்ளது. மக்களுக்கு விருப்பமானது மட்டுமல்ல அவர்களுக்கு எது நல்லதோ அதையே பிரதமர் மோடி செய்து வருகிறார். மக்களை அச்சுறுத்தும் முந்தைய அரசின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370, 35 ஏ நீக்கப்பட்டுள்ளதுடன், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. முத்தலாக் நீக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளில் பிரதமர் மோடி தெளிவான முடிவு எடுத்து, பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளார்.


latest tamil news



தேர்தல் அறிக்கையில் புதிய அரசிற்கான பாதையை வகுக்கும் புதி கலாச்சாரத்தை மோடி உருவாக்கி உள்ளார். அரசியல் வேறுபாடுகளை கடந்து மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் பலரும் பாராட்டுகின்றனர். என்ன நடக்கும், எப்படி நடக்கும், மக்கள் என்ன சொல்வார்கள் என்பன போன்ற கேள்விகள் நீக்கப்பட்டு, மக்களுக்கு எது நல்லதோ அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
08-ஜன-202018:13:29 IST Report Abuse
J.Isaac என்று சொல்லப்படுகிறது .
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஜன-202017:50:04 IST Report Abuse
தமிழ்வேல் அந்த 15 லட்சம், பாக்கி 10 சதவிகிதத்தில் இருக்கனும்.
Rate this:
Cancel
Karthikeyan - Madurai,இந்தியா
08-ஜன-202017:24:59 IST Report Abuse
Karthikeyan ////90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் : அமித்ஷா////
Rate this:
Karthikeyan - Madurai,இந்தியா
08-ஜன-202017:54:21 IST Report Abuse
Karthikeyan. காக்கா தூக்கி போயிருச்சோ ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X