உக்ரைன் விமானம் விபத்து : பயணித்த 176 பேரும் பலி

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (4)
Advertisement

தெஹ்ரான் : ஈரானில் 176 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் விழுந்து நொருங்கியதில், அனைவரும் உயிரிழந்தனர்.





ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு போயிங் 737 விமானம் புதன் காலை புறப்பட்டது. உக்ரைன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் அது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு வெடித்துச்சிதறியது. விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர். விமானம் நடுவானில் வெடித்து, தீப்பிழம்பாக மாறி வயல்வெளிக்குள் விழும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், 176 பயணிகளுடன் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.





ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதா அல்லது தாக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH RS -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202013:52:38 IST Report Abuse
PRAKASH RS அமெரிக்கா தாக்குதல் பழியை ஈரான் மீது போடுகிறது
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-ஜன-202011:43:08 IST Report Abuse
Cheran Perumal பிரச்சினை தீரும்வரை ஈரான் ஈராக்கிற்கு யாரும் செல்லாமல் இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
08-ஜன-202010:40:25 IST Report Abuse
blocked user சீன ஏவுகணை குறி தவறி அடித்து விட்டதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X