உக்ரைன் விமானம் விபத்து : பயணித்த 176 பேரும் பலி| Dinamalar

உக்ரைன் விமானம் விபத்து : பயணித்த 176 பேரும் பலி

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (4)
Share

தெஹ்ரான் : ஈரானில் 176 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் விழுந்து நொருங்கியதில், அனைவரும் உயிரிழந்தனர்.



latest tamil news


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், 176 பயணிகளுடன் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதா அல்லது தாக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X