பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

Added : ஜன 08, 2020
Advertisement

சேலம்: சேலம், பெங்களூரு பைபாஸ் சாலை, சாஸ்தா நகர், ஐயப்பா ஆஸ்ரமத்தில் இன்று காலை, 9:00 மணிக்கு விளக்கு பூஜை, மாலை, 6:30 மணிக்கு கேரள பஞ்ச வாத்தியங்களுடன் மகரவிளக்கு கொடியேற்றம், இரவு, 7:00 மணிக்கு பகவதி சேவை நடக்கிறது. நாளை (ஜன., 9) காலை, 9:00 மணிக்கு கணபதிக்கு கலச பூஜை, 10ல், பகவதி அம்மனுக்கு கலசபூஜை, 11ல், நவகிரகங்களுக்கு கலசபூஜை, 12ல், பாலமுருகனுக்கு கலசபூஜை, இரவு, 7:00 மணிக்கு பகவதி சேவை, இன்னிசை கச்சேரி, கதகளி பரதநாட்டியம், பிரகலாத சரித்திர நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 13ல், நாகராஜாவுக்கு கலச அபி?ஷகம், தீபாராதனை முடிந்து, உற்சவ பலி, ஐயப்ப சுவாமியின் பூதகணங்களுக்கு விசேஷ உணவு வழங்கப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, அன்னை நாட்டியாலயாவின் பரத நாட்டியம் அரங்கேற்றப்படுகிறது. 14ல், காலை, 8:00 மணிக்கு ஐயப்பனுக்கு அஷ்டாபி?ஷகம், 108 சங்கு பால் அபி?ஷகம் செய்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு பக்தி பாடல்கள், பள்ளி வேட்டைக்கு செல்லுதல், பெண்கள் விளக்கேந்தி சாஸ்தாநகரில் ஊர்வலம் வருகின்றனர். 15ல், காலை, 5:00 மணிக்கு கனி காணுதல், உற்சவ மூர்த்திக்கு அபி?ஷகம், அன்னதான நிகழ்ச்சியுடன் மதியம், 12:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X