பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கு மனநலம் குறித்த ஆலோசனை வகுப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

சங்ககிரி: சங்ககிரியில், அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கு, மனநலம் குறித்த ஆலோசனை வகுப்பு நடந்தது. சங்ககிரி ஒன்றியம், வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளியில், தேசிய நலவாழ்வு இயக்கம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மனநல திட்டம் சார்பில், மாணவர்களுக்கு ஆலோசனை வகுப்பு நேற்று நடந்தது. தலைமையாசிரியர் அர்சுனன் தலைமை வகித்தார். மனநல ஆலோசகர் ரெனியா, 'வாழ்க்கை திறன் கல்வி, படைப்பாற்றல் திறன் குறித்தும், சங்ககிரி அரசு மருத்துவமனை மனநல டாக்டர் ரம்யா, 'மனம், மனநோய், மனஅழுத்தம், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள், அவற்றை தவிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மொபைல்போன் தொடர்ந்து பேசுவதால் ஏற்படும் அறிவுத்திறன் பாதிப்பு' குறித்தும் பேசினர். சமூக ஆர்வலர்கள் தீபா, அஜித்குமார் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X