பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : ஜன 08, 2020
Advertisement

குப்பை தொட்டி பயன்பாட்டுக்கு வருமா? தலைவாசல் ஏரி அருகே, பழைய பொது கழிப்பிடம் இருந்த பகுதியில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட, குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகள், பஸ் ஸ்டாண்டுகளில் குப்பை சேகரிக்க வழங்கப்பட்ட தொட்டிகள், பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ளன. அதன் பக்கவாட்டில் செடிகள் வளர்ந்து, தொட்டிகள் மீது படர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி புதர் மண்டியது போல் காட்சியளிக்கிறது. எனவே, குப்பைத் தொட்டியை பயனுக்கு கொண்டு வர வேண்டும்.
நெடுஞ்சாலை நடுவே பள்ளத்தால் விபத்து: சங்ககிரி, பழைய பஸ் ஸ்டாண்ட் முன், இடைப்பாடி பிரதான சாலையில் பாதாள சாக்கடை மீது, தரைமட்டம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கனரக வாகனங்களின் பாரம் தாங்காமல் பாலத்தின் கான்கிரீட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், ஜல்லிகள் கொட்டி சீரமைத்தாலும், வாகனங்கள் செல்வதால் அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது. இதனால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

இதன் பெயர் தான் தகவல் பலகையா? தலைவாசல், தேவியாக்குறிச்சி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊரின் தொடக்கத்தில் ஊராட்சியின் பெயர், தோற்றம், ஏரி, குளங்களின் எண்ணிக்கை, ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திருமணம், கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட விளம்பர போஸ்டர்களை ஒட்டி நாசம் செய்துள்ளனர். இதனால் பலகையில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

மோசமான சாலை; மக்கள் கடும் அவதி: சங்ககிரி ஒன்றியம், மஞ்சக்கல்பட்டி கிராமம், பறையங்காட்டானூர் மக்கள் பாறைகள் நிறைந்த பகுதியில் வசிக்கின்றனர். வரதங்காட்டானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து, பறையங்காட்டானூர் வரை, பாறை மீது போடப்பட்ட கான்கிரீட் சாலை, மிக மோசமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். கான்கிரீட் சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பயன்பாடில்லாத பயணிகள் நிழற்கூடம்: சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தேவியாக்குறிச்சி பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் காத்திருப்பதற்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பஸ்கள் நின்று செல்வதில்லை. அங்குள்ள கல்லூரிக்கு முன்பாக பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால் பயணிகள் நிழற்கூடம் இருந்தும், பயன்பாடில்லாத நிலை உள்ளது. பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X