பொது செய்தி

தமிழ்நாடு

கெங்கவல்லியில் ரூ.5 கோடி மதிப்பு பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு

Added : ஜன 08, 2020
Advertisement

ஆத்தூர்: கெங்கவல்லியில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக அம்மன் சிலையை விற்க முயன்றவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கெங்கவல்லி பகுதியில் பழமையான பஞ்சலோக அம்மன் சிலை, ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது. நேற்று காலை, 9:00 மணியளவில் கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையில், டி.எஸ்.பி., முகேஷ் உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கெங்கவல்லியில் உள்ள ராஜசேகர் என்பவரது வீட்டில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டனர். இந்த சிலை, ஒன்றே கால் அடி உயரம், ஆறரை கிலோ எடை உள்ளது. இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பஞ்சலோக சிலையை கடத்தி விற்க முயன்ற ராஜசேகர், 45, என்பவர் மீது, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட அம்மன் சிலை, எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்தும், இதில் தொடர்புடையவர்களை தேடி வருவதாகவும், சிலை கடத்தல் பிரிவு போலீசார் கூறினர். இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார் கூறுகையில், 'ஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் பஞ்சலோக சிலை திருட்டு போனதாக எந்த புகாரும், வழக்கும் இல்லை. இருந்தாலும், சிலை கடத்தி வந்து விற்க முயன்ற நபர் குறித்து, விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.

நிலம் வாங்குவது போல் வந்து சிலையை மீட்ட போலீசார்: நேற்று காலை, 7:00 மணியளவில் சிலை கடத்தல் பிரிவு கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையிலான போலீசார், பழைய லுங்கி, சட்டை அணிந்தபடி ராஜசேகர் வீட்டிற்கு சென்றனர். அவரிடம், நிலம் வாங்குவதற்கு வந்துள்ளதாக கூறி, பேச்சு கொடுத்து விசாரணையை துவக்கியுள்ளனர். அதன்பின், அவரது வீட்டினுள் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான, பஞ்சலோக அம்மன் சிலை பதுக்கி வைத்துள்ளதை கண்டறிந்து, ராஜசேகர் மற்றும் சிலை வாங்குவதற்கு வந்த மூன்று பேரை போலீசார் பிடித்துள்ளனர். சிலை கடத்தலில் கைதான ராஜசேகர் மனைவி தெய்வானை, 38, இவர்களுக்கு உமேகா, 9, என்ற மகள், அகர்வால், 5, என்ற மகன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X