சேலம்: சேலம் மண்டல அளவில், வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம் வரும், 10ல் நடக்கிறது. இது தொடர்பாக, வருங்கால வைப்புநிதி மண்டல உதவி ஆணையர் அர்ஜூன்துக்ரல் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மண்டல அலுவலகத்தில், ஆணையர் ஹிமான்ஷூகுமார், ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் நிலை-2, மண்டல ஆணையர் சிசுபாலன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அமலாக்க அதிகாரி இளங்கோவன் ஆகியோர் தலைமையில், ஜனவரி மாத வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம், வரும், 10ல், தனித்தனியே நடக்கின்றன. காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை, சந்தாதாரர்கள், பிற்பகல், 3:00 மணி முதல், 4:00 மணி வரை தொழிலதிபர்கள், மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள், நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். குறிப்பிட்ட நேரப்படி, சந்திப்பு நடைபெறும். உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், குறைகள் தொடர்பான விபரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எண், யுஏஎன்., எண், டெலிபோன், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இன்றைக்குள் தெரியப்படுத்தவும். இணையதள முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE