பொது செய்தி

தமிழ்நாடு

முந்திரி, திராட்சை, ஏலக்காய் பேக்கிங் பணி ஜரூர்: 1,577 ரேஷன் கடைகளில் நாளை பொங்கல் பரிசு

Added : ஜன 08, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், 1,577 ரேஷன் கடைகளில், நாளை முதல், 13 வரை, பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று கொள்ளலாம்.
சேலத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கடந்த, 5ல், டி.ஆர்.ஓ., திவாகர், பள்ளப்பட்டி ரேஷன் கடையில் துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்டத்தில், 1,577 ரேஷன் கடைகளில் நாளை முதல், 13 வரை, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன்கார்டு ஒன்றுக்கு, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை, ஒன்பது லட்சத்து, 72 ஆயிரத்து, 118 ரேஷன்கார்டுதாரர்கள் பெற்று கொள்ளலாம்.

கூட்டுறவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன்கடையில் காலை, 9:30 -1:30 மணிவரை, பிற்பகல், 2:30-5:30 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். அதற்காக வரும், 10ல், விடுமுறை ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து, 13ம் தேதி வரை பெற்று கொள்ளலாம். தற்போது, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியன, தனித்தனியே, பழுப்புநிற கவரில் பேக்கிங் செய்யும் பணி, முழுவீச்சில் நடக்கிறது. பூலாம்பட்டி, இடைப்பாடியில் இருந்து, ஒட்டுமொத்த கடைகளுக்கும் கரும்பு வரத்து, துரிதமாக நடக்கிறது. சேலம் மட்டுமின்றி, கரூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ரேஷன்கடைகளுக்கு தேவையான கரும்பு, சேலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில், அளவு குறைபாடு, முறைகேடு நடந்தால், ரேஷன் கடை தகவல் பலகையில் உள்ள மொபைல் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X