பொது செய்தி

தமிழ்நாடு

மேக்னசைட் சுரங்கத்தை மீண்டும் திறக்க தொழிலாளர்கள் சேலத்தில் உண்ணாவிரதம்

Added : ஜன 08, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, மூன்றாண்டுகளாக மூடப்பட்டுள்ள மேக்னசைட் சுரங்கத்தை, திறக்க வலியுறுத்தி அதன் தொழிலாளர்கள், சேலத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
நாட்டாண்மை கழககட்டடம் முன், நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, தொழிலாளி அண்ணாமலை தலைமை வகித்தார். மேக்னசைட் பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலர் சதாசிவம் பேசியதாவது: ஓமலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், மேக்னசைட் என்ற வெள்ளைக்கல் வெட்டி எடுக்கும், திறந்தவெளி சுரங்கம், 1,800 ஏக்கர் பரப்பில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இது, மத்திய உருக்குத்துறை மற்றும் உருக்கு குழுமத்தின் துணை நிறுவனமாக விளங்கும், 'செயில்' நிறுவனத்தின் அங்கம். தமிழ்நாடு மேக்னசைட்கட்டுப்பாட்டில், சுரங்கம் உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப, உரிமத்தை புதுப்பிக்க தவறியதால், மூன்றாண்டுகளாக சுரங்கம் மூடிக்கிடக்கிறது. அதனால், 1,500 தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். மறைமுகமாக, 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, அரசுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டி தொகை, விற்பனை வரி இழப்பு, அன்னிய செலாவணி இழப்பு என, பல்வேறு இனங்களில், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதிக்காத, நச்சுத்தன்மை இல்லாத மேக்னசைட் சுரங்கத்தை மீண்டும், திறந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிர்வாகிகள் மாதேஸ்வரன், ரவி, கோவிந்தசாமி, பெண்கள் தொழிலாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X