பொது செய்தி

தமிழ்நாடு

2 இடங்களில் வாக்காளர் பெயர் பதிவு: வார்டு உறுப்பினர் மீது புகார்

Added : ஜன 08, 2020
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, மல்லியக்கரை ஊராட்சி, ஐந்தாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராமமூர்த்தி, 53, வெற்றி பெற்றார். அவர் மீது, ஆத்தூர் பி.டி.ஓ., ராமநாதனிடம், மற்றொரு வேட்பாளர் பெரியசாமி புகாரளித்துள்ளார்.
மனு விபரம்: மல்லியக்கரை ஊராட்சி, ஐந்தாவது வார்டில், 140 ஓட்டுகள் பெற்ற ராமமூர்த்தி வெற்றி பெற்றார். இவருக்கு, இதே ஊராட்சியில், நான்காவது வார்டு வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பெயர் உள்ளது. அதேபோல், அரசநத்தம் ஊராட்சி, முதலாவது வார்டு வாக்காளர் பட்டியலிலும் அவர் பெயர் உள்ளது. இருவேறு ஊராட்சிகளில், பெயர் உள்ள நிலையில், வேறு ஒரு வார்டில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையத்துக்கு தவறான வாக்காளர் பட்டியல் ஆவணம் கொடுத்து வெற்றி பெற்றதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஐந்தாவது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பி.டி.ஓ., ராமநாதன் கூறுகையில், ''இருவேறு ஊர்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் உள்ளதாக வந்துள்ள புகார் மீது, விசாரணை செய்து, கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X