பொது செய்தி

தமிழ்நாடு

தகராறு நடந்த கருக்கல்வாடி பஞ்.,ல் தொடரும் போலீசார் பாதுகாப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

ஓமலூர்: தேர்தல் தகராறு நடந்த பகுதியில், அசம்பாவிதத்தை தவிர்க்க, போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியம், கருக்கல்வாடி ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாப்பாகணேசன் (பா.ம.க.,), இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜேந்திரன் (தி.மு.க.,) ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே, துணைத்தலைவர் பதவியை தக்க வைக்க, வார்டு உறுப்பினர்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், அடிதடியில் முடிந்து பாப்பாகணேசன் உட்பட இரு தரப்பினரிடையே பத்துக்கும் மேற்பட்டோர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கருக்கல்வாடி, கே.ஆர். பாளையம், சேவகனூர் ஆகிய மூன்று இடங்களில், தலா, 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X