சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தையில் மாமூல் கேட்டு மிரட்டல்: அ.தி.மு.க., பிரமுகர் மீது அடுத்தடுத்து புகார்

Added : ஜன 08, 2020
Advertisement

சேலம்: வாரச்சந்தையில், மாமூல் கேட்டு மிரட்டுவதாக, அ.தி.மு.க., பிரமுகர் மீது, போலீசில் அடுத்தடுத்து புகார் தரப்பட்டுள்ளது.
சேலம், மணியனூரில் செவ்வாய் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சுங்கம் வசூலிக்கும் உரிமத்தை மோகன், 50வது வார்டு ஜெ.,பேரவை தலைவர் நாகராஜன் எடுத்துள்ளனர். சந்தையில் கூடுதலாக சுங்கம் வசூலிப்பதாக, அ.தி.மு.க., வார்டு பிரதிநிதி ராமச்சந்திரன், மாநகராட்சியில் புகார் அளித்தார். இந்நிலையில் ராமச்சந்திரன், வியாபாரிகளிடமும், மோகனிடமும் மாமூல் கேட்டு மிரட்டியதாக, அன்னதானப்பட்டி போலீசில், நாகராஜன் கடந்த மாதம் புகாரளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆதரவாளர்களுடன் தகாத வார்த்தை பேசி, ராமச்சந்திரன் மிரட்டியதாக, ஆடியோ, வீடியோ காட்சிகளுடன், மோகன், நாகராஜன் ஆகியோர், ஜன.,?ல் போலீசில் மீண்டும் புகார் தந்தனர். உள்கட்சி பிரச்னை என்பதால், போலீசார் மவுனம் காப்பதாக தெரிகிறது. இந்நிலையில் வாரச்சந்தை மாமூல் பிரச்னையில், மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மோகன், நாகராஜன் கூறும்போது, 'துணை முதல்வர், அவரின் மகன் பெயரை சொல்லி ராமச்சந்திரன், அட்டகாசத்தில் ஈடுபடுகிறார். அவர் மாமூல் கேட்டு மிரட்டுவது குறித்து, போலீசில் புகார் அளித்துள்ளோம்' என்றனர். ராமச்சந்திரன் கூறும்போது, ''சந்தையில் கூடுதலாக சுங்கம் வசூலிப்பது குறித்து, மாநகராட்சியில் புகாரளித்ததால், மோகன் என்னை மிரட்டினார். எனக்கு ஆதரவாக, என் உறவினர்கள் வந்தனர். அவர்கள், தி.மு.க.,வில் இருப்பதால், உறவுமுறையை விட்டுத்தர முடியாது. என் மீது பொய் புகார் தரப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X