பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : ஜன 08, 2020
Advertisement

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா? தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சின்னத்தாய் அம்மாள் காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீதியில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது கால்வாயின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இவ்வாறு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால், இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
சேவை மையத்தை திறக்கணும்: அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்., ஒடசல்பட்டியில், பட்டா, சிட்டா, ஜாதிச்சான்று, அ.பதிவேடு உள்ளிட்ட, சான்றுகளை மக்கள் எளிதாக பெறும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 13.12 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. இதனால், மக்கள் அரூர் தாலுகா அலுவலகம் செல்கின்றனர். எனவே, சேவை மையத்தை திறக்க வேண்டும்.

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: பாலக்கோடு அடுத்த பேளாரஹள்ளி பஞ்., தொட்டம்பட்டியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில் தொட்டம்பட்டியில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன் இத்தொட்டியின் மின்மோட்டார் பழுதானது. இதனால், இதில் தண்ணீர் வருவதில்லை. இதை சீரமைத்து, மீண்டும் தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X