பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் போனஸ் கேட்டு ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம்

Added : ஜன 08, 2020
Advertisement

தர்மபுரி: தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க, தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மபுரியில் நடந்த கூட்டத்தில், ஆணையாளர் சதாசிவம் முன்னிலையில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மாவட்ட தலைவராக மாணிக்கம், செயலாளராக கணேசன், பொருளாளராக ஜெயபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், நிலுவையில் உள்ள, 21 மாத ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக தற்போது வழங்கப்படும், 7,850ஐ உயர்த்தி, 9,000 வழங்க வேண்டும். மருத்துவப்படி, 500 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி, 50 ஆயிரத்திலிருந்து, 1.50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு, 150 ரூபாய் மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மத்திய செயற்குழு உறுப்பினர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X