பொது செய்தி

தமிழ்நாடு

பொக்லைன் மூலம் மரவள்ளிக்கிழங்கு அறுவடை: கூடுதல் செலவு; விவசாயிகள் கவலை

Added : ஜன 08, 2020
Advertisement

அரூர்: அரூர் பகுதியில், பொக்லைன் வாகனம் மூலம், மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, 15 ஆயிரம் ஏக்கரில், மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்திருந்தனர். கடந்த, மூன்று மாதங்களாக மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. போதிய மழையின்மையால், சில இடங்களில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்யாமல் இருந்து வந்தனர். தற்போது, பொக்லைன் வாகனம் மூலம், மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: நடப்பாண்டு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட, குறைவாக பெய்துள்ளது. ஈரப்பதம் இல்லாததால், சில இடங்களில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்ய முடியாத நிலையுள்ளது. இதனால், பொக்லைன் வாகனம் மூலம் தற்போது, மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் பணி நடக்கிறது. இதற்கு, ஒரு மணி நேரத்துக்கு, 900 ரூபாய் என, கட்டணம் வழங்கப்படுகிறது. வழக்கமாக ஆட்களை கொண்டு அறுவடை செய்வதை விட, பொக்லைன் வாகனம் மூலம், மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும்போது, இரண்டு மடங்கு கூடுதலாக செலவாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X