பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு முழு மேம்பாடு பயிற்சி முகாம்

Added : ஜன 08, 2020
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு வட்டார வள மையத்தில், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேசிய அளவிலான முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு (நிஷ்தா)பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சிகள் (நிஷ்தா), ஐந்து நாட்கள் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் முதற்கட்டமாக, 2019 அக்.,ல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, நிஷ்தா பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வள மையத்தில், காரிமங்கலம், பாலக்கோடு யூனியன்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி நேற்று துவங்கியது. முகாமை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுகுணா துவக்கி வைத்தார். கருத்தாளர்கள், குறள்மதி, முனியப்பன், கோவிந்தராஜன், வேலாயுதம், குமரேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், தனிநபர், சமூகத்திற்குரிய பண்புகளை வளர்த்தல், பாதுகாப்பு, ஆரோக்கியமான பள்ளி சூழலை உருவாக்குதல், பள்ளியில் சுகாதாரம் காத்தல், மேம்படுத்துதல், கலையோடு இணைந்து கற்றல், கற்பித்தல் அணுகுமுறைகள், பள்ளிக் கல்வியில் புதுமுயற்சிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. இதில், 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X