சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்தை மகன்கள் ஏமாற்றி பறிப்பு: மகள்களுடன் மூதாட்டி தர்ணா

Added : ஜன 08, 2020
Advertisement

தர்மபுரி: சொத்தை ஏமாற்றி மகன்கள் பறித்ததாக கூறி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மகள், பேரனுடன் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட முயன்றார்.
சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் கவுண்டர்காட்டை சேர்ந்தவர் கண்ணன் மனைவி தனபாக்கியம், 85; இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். மொரப்பூர் பகுதியில் உள்ள சொத்தை, மகன்கள் ஏமாற்றி பறித்தாக, கலெக்டர் அலுவலகத்தில் தனபாக்கியம் ஏற்கனவே மனு அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மூதாட்டி தனபாக்கியம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளிக்க நேற்று, தனது மகள்கள் மற்றும் பேரனுடன் வந்தார். அப்போது அவர் மகள்கள், பேரனுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றார். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, துறை அதிகாரிகளிடம் பேச அழைத்துச்சென்றனர். பின்னர், கலெக்டர் அலுவலகத்திலிருந்த, அரூர் சப் - கலெக்டர் பிரசாத்திடம் மனு அளித்தார். மனுவை பெற்ற அவர், மூதாட்டியின் மனுவை விசாரிக்க, அரூர் தாசில்தார் செல்வகுமாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள், அரூர் தாலுகா அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X