பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : ஜன 08, 2020
Advertisement

மேம்பாலமின்றி விவசாயிகள் அவதி: சூளகிரி மற்றும் கெலமங்கலம் ஒன்றியத்துக்கு இடையில், பெரேவ் என்ற இடத்தில் ஓடும் தென்பெண்ணை ஆறு குறுக்கே, மேம்பாலம் அமைக்க வேண்டும். இங்கிருந்து அஞ்சாளம், மொரசிப்பட்டி, கூட்டூர், போகிபுரம், தொட்டிப்பள்ளம் கிராமங்களில் இருந்து விவசாய பொருட்களை கொண்டு செல்ல, 20 கி.மீ., தூரம் சுற்றி வருவதால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மாதராஜ், பட்டிப்பாறை.

தார்ச்சாலை அமைக்க வேண்டும்: சூளகிரி அடுத்த சின்னாறு அணை அருகே இருந்து, ஒன்னட்டியூர் வரை 1.5 கி.மீ., தூரத்திற்கு வழித்தடம் உள்ளது. மிகமோசமான நிலையில் உள்ள இதன் வழியாக, வாகனங்கள் மட்டுமின்றி, நடந்து செல்வது கூட சிரமமாக உள்ளது. மாணவ, மாணவியர் இச்சாலையில் தான் பயணிக்க வேண்டியுள்ளது. வனப்பகுதி நிறைந்துள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி, உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

- வி.கிருஷ்ணப்பா, ஒன்னட்டியூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X