பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் ஆக்கிரமிக்க இருந்த கிணற்றை மீட்ட மக்கள்

Added : ஜன 08, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: தனிநபர் ஆக்கிரமிக்கவிருந்த, பொது குடிநீர் கிணற்றை கிராம மக்கள் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேர்ப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த, 80 ஆண்டுகளுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தில், கிணறு வெட்டப்பட்டது. இதன் மூலம், கிராம மக்களுக்கு தண்ணீர் தடையின்றி கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு தண்ணீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் கிணற்றின் மீது சிமென்ட் சிலாப்பை கொண்டு மூடப்பட்டது. மின் மோட்டார் அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், கிணற்றை ஆக்கிரமித்து மூட முடிவு செய்து, மண்ணை கொட்டினார். இதனால், அப்பகுதி மக்கள் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். கலெக்டர் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர், சர்வே செய்து கிணற்றை மீட்டார். பின்னர், கிராம மக்கள் ஒன்றிணைந்து சிமென்ட் சிலாப்களை அகற்றிவிட்டு, தங்களது சொந்த செலவில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவரை கட்டினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பில் இருந்த கிணற்றை அதிகாரிகள் மீட்டுக் கொடுத்தனர். தற்போது கிணற்றில் தண்ணீர் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுக்க மின்மோட்டாரை பொருத்தி, தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X