பொது செய்தி

தமிழ்நாடு

1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: மாவட்ட கலெக்டர் தகவல்

Added : ஜன 08, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்த முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் வரும், 19ல் நடக்க உள்ளது. இதில், 1 லட்சத்து, 59 ஆயிரத்து, 597 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. இந்த முகாம்கள், பத்து ஒன்றியங்களில், 900 மையங்களிலும், இரண்டு நகர் பகுதியில், 84 மையங்களில் என, 984 மையங்களில் நடக்க உள்ளன. மேலும், நடமாடும் முகாம்கள் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து மையங்களுக்கு வினியோகம் செய்ய, 90 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில், 4,077 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். மண்டலக்குழு மற்றும் துறை சார்ந்த, 27 அலுவலர்கள் முகாம்களை மேற்பார்வை செய்ய உள்ளனர். போலியோ சொட்டு மருந்துகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சத்துணவு மையங்களில் காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரையும், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்தும் வழங்கப்பட உள்ளன. எனவே, ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஏற்கனவே சொட்டு மருந்து போட்டிருந்தாலும் வரும், 19ல் மீண்டும் சொட்டு மருந்தை போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X