பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பற்றோருக்கு அழைப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: படித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, வேலையின்றி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக, மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவித்தொகை பெற பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்கள், 2019 டிச., 31க்குள் கல்வித்தகுதிகளை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், 45 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில், நிதி உதவித்தொகை பெறுபவராகவும், மாணவ, மாணவியராகவும் இருக்கக்கூடாது. தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகுதி உடையவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X