பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமில் அ.தி.மு.க.,வினர் பங்கேற்க வேண்டுகோள்

Added : ஜன 08, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமில், அ.தி.மு.க.,வினர் பங்கேற்க வேண்டும் என, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த, 23 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விடுபட்டவர்களின் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய வரும், 11 மற்றும் 12 என இரண்டு நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கிறது. மேலும், 2020 ஜன., 1ல், 18 வயது நிரம்பிய அனைவரும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த சிறப்பு முகாமில், அ.தி.மு.க.,வை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்யவும், புதிய வாக்காளர்களின் பெயரை சேர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X