பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் - ஜோலார்பேட்டை வழித்தடம்: ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை

Added : ஜன 08, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் - ஜோலார்பேட்டை இடையே ரயில் வழித்தடம் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து, பல்வேறு தொழிற்சாலை அமைப்புகளுடன், ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.ஓசூர் - ஜோலார்பேட்டை இடையே ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்காக கடந்த, 2002ல் இருந்தே சர்வே நடக்கிறது. மூன்று முறை சர்வே எடுத்தும், லாபகரமாக இல்லை எனக்கூறி கோப்புகள்

ஓசூர்: ஓசூர் - ஜோலார்பேட்டை இடையே ரயில் வழித்தடம் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து, பல்வேறு தொழிற்சாலை அமைப்புகளுடன், ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஓசூர் - ஜோலார்பேட்டை இடையே ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்காக கடந்த, 2002ல் இருந்தே சர்வே நடக்கிறது. மூன்று முறை சர்வே எடுத்தும், லாபகரமாக இல்லை எனக்கூறி கோப்புகள் மூடப்பட்டன. ரயில்வே வழித்தடத்தை கொண்டு வர, 14 சதவீத லாபம் இருக்க வேண்டும் என்ற நிலையில், ஜோலார்பேட்டை - ஓசூர் திட்ட சர்வேயில் மூன்று முறையும், சரக்கு ரயில் போக்குவரத்தும் லாபகரமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் முயற்சியால், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, ஜோலார்பேட்டை வழித்தட சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து, தொழிற்சாலை அமைப்புகளுடன் ஆலோசனை செய்ய, தென்னக ரயில்வே இயக்க துணை மேலாளர் கோவிந்தசாமி தலைமையில், பொறியாளர் ஜீவநாயகம், இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், மாலிக் ஆகியோர் நேற்று காலை வந்தனர். அவர்களிடம் ஹோஸ்டியா சங்கத்தலைவர் வேல்முருகன், முன்னாள் தலைவர் ஞானசேகரன், கிறிஸ்யா சங்க தலைவர் ராமலிங்கம் மற்றும் ஓசூர் இன்டஸ்ரியல் அசோசியேஷன் நிர்வாகிகள் பேசினர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தொழிற்சாலை உதிரிபாகங்கள், மாங்கூழ், கிரானைட், பூ, காய்கறி, புளி ஆகியவை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், அங்கிருந்து ஆட்டோமொபைல் மற்றும் கிரானைட் நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்கள் வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளதால், பயணிகள் ரயில் சேவையும் சிறப்பாக இருக்கும் என்பதால், ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் வழித்தடம் லாபகரமாக இருக்கும் எனக்கூறி, மனுக்களை கொடுத்தனர். மேலும், திருப்பத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, எண்ணேகொல்புதூர், சூளகிரி, கோபசந்திரம் வழியாக, ரயில்வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை பார்வையிட, ரயில்வே அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X