சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பு கடித்ததில் பள்ளி மாணவர் பலி

Added : ஜன 08, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: மகாராஜகடை அருகே, பாம்பு கடித்து பள்ளி மாணவர் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பசுவராஜ், 37. விவசாயி; இவரது மகன் பிரசன்னா, 8, அப்பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 5ல் இரவு, பிரசன்னா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, விஷப்பாம்பு அவரது வலது கையில் கடித்துள்ளது. இதையறிந்த பெற்றோர், பிரசன்னாவை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து, மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X