உலக தடகளப்போட்டி: மா.திறனாளிக்கு நிதியுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக தடகளப்போட்டி: மா.திறனாளிக்கு நிதியுதவி

Added : ஜன 08, 2020

சத்துவாச்சாரி: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர், வெங்கடேசன். மாற்றுத்திறனாளியான இவர், அடுத்த மாதம், 20ல், தாய்லாந்து நாட்டில் நடக்க உள்ள உலக தடகள போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். தாய்லாந்து செல்வதற்கான செலவின தொகையாக, ஒரு லட்சத்து, 2,300 ரூபாயை, தன் விருப்ப நிதியில் இருந்து, கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வழங்கினார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாட்சாயிணி, அலுவலக மேலாளர் முரளி உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X