பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தையுடன் தாய், பாட்டி 'செல்பி': அனுப்பும் சிறந்த படத்துக்கு பரிசு: கலெக்டர்

Added : ஜன 08, 2020
Advertisement

திருவண்ணாமலை: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தையுடன் தாய், பாட்டி ஆகிய, மூன்று தலைமுறைகளுடன் 'செல்பி' எடுத்து போட்டோ அனுப்பினால், சிறந்த படத்துக்கு பரிசு வழங்கப்படும் என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளுடன், 'செல்பி' எடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கப்படும் என, கடந்த, 2018ல் அறிவிக்கப்பட்டதில், 500க்கும், மேற்பட்டோர், 'செல்பி' எடுத்து அனுப்பினர். இதில், 15 சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. இந்த ஆண்டும், இதேபோன்று, மூன்று தலைமுறை பெண்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் கந்தாசமி வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 24ல், தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தை உள்ளவர்கள். 'ஆஞுtடி ஆச்ஞிடச்ணி ஆஞுtடி கச்ஞீடச்ணி' என்ற 'பேஸ்புக்' முகவரி, அல்லது, 73972 85643 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண், ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில், பாட்டி, அம்மா, பெண் குழந்தை ஆகியோர், 'செல்பி' எடுத்து அனுப்ப வேண்டும். அதில், பெண் குழந்தையின் முழு பெயர், பெற்றோர் பெயர், முகவரி பதிவு செய்து, வரும் 13க்குள், அனுப்ப வேண்டும். இதில் சிறந்த 'செல்பி' படத்துக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி கூறியதாவது: விழிப்புணர்வால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2019ல், 159 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது மூன்று தலைமுறை, பாட்டி, அம்மா, குழந்தை என சேர்ந்து, 'செல்பி' எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். சிறந்த படங்கள், கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, வரும், 24ல் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X