சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெறிநாய் கடித்து 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

Added : ஜன 08, 2020
Advertisement

செய்யாறு: செய்யாறில் வெறிநாய் கடித்து காயமடைந்த, 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு, பசும்பொன் நகரில் இருந்த ஒரு வெறிநாய், அவ்வழியாக சென்ற பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து குதறியது. பின்னர், மாயாண்டிபுரம், கற்பகவிநாயகர் கோவில் தெருக்களில் சென்ற பொதுமக்களையும் விரட்டி விரட்டி கடித்தது. இதில், 13 பேர் காயமடைந்தனர். இவர்கள், செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், நாய் அங்கிருந்து தப்பி சென்றது.


* வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமியில், நேற்று மாலை, 4:00 மணிக்கு வெறிநாய் ஒன்று வந்தது. தெருவில் இருந்த மக்களை விரட்டி கடித்தது. இதில், பரதராமியை சேர்ந்த, ராமசாமி, 45, நடராஜன், 34, அசோக், 56, பசுபதி, 35, விஸ்வநாதன், 24, உள்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புகாரின்படி பரதராமி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X