சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் சாவு

Added : ஜன 08, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டதில் எஸ்.எஸ்.ஐ., இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேலாராணியை சேர்ந்தவர் பழனி, 58; திருவண்ணாமலையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சாந்தி, 50; இவர்களது மகன் சுரேந்தர், மகள் லோகேஸ்வரி. பழனி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, பணியிலிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனிருந்த போலீசார், அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X