பொது செய்தி

தமிழ்நாடு

பணத்தை திரும்ப தா...! மிரட்டும் வி.ஐ.பி.,

Added : ஜன 08, 2020
Advertisement

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பரமேஸ்வரி. இவரது கணவர் முருகன், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில், நான்காவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இந்தப் பதவிக்கு ஏலம் நடந்ததாகவும், முருகன், 14 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் எடுத்ததாகவும், தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணையும் நடத்தப்பட்டது. தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது. தோல்வி அடைந்ததால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அவரது கணவரும், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பதாக, சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருகிறது. அதில் பேசுபவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக, கொடுத்த பணத்தை, சிலர் மட்டும் அப்படியே வைத்துக் கொண்டதால் தான், தோல்வியடைந்து விட்டோம். அதனால், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி, முக்கிய பிரமுகர் தரக்குறைவாக திட்டுவதாக, தெரிவிக்கிறார். இந்த வீடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் பரவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X