பொது செய்தி

தமிழ்நாடு

24 பதவிகளுக்கு இன்று ஓட்டு எண்ணிக்கை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement

சென்னை : நிறுத்தி வைக்கப்பட்ட, 24 உள்ளாட்சி பதவிகளுக்கு, இன்று ஓட்டு எண்ணிக்கை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், வேட்பாளரின் பெயர், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரை, ஊராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்ததாகவும், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், துணை வாக்காளர் பட்டியலில், பெயர் நீக்கப்பட்டதாகவும் புகார் வந்தது.இதன் காரணமாக, அரியலுார், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், கடலுார், கன்னியாகுமரி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூரில் உள்ள, 24 உள்ளாட்சி பதவிகளுக்கு, ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

கிராம ஊராட்சியிலோ, ஊராட்சி ஒன்றியத்திலோ அல்லது அந்த மாவட்டத்திலோ குடியிருக்காதவர்கள், ஊராட்சி உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். எனவே, புகாருக்குள்ளான நபர்கள், தொடர்புடைய ஊராட்சியில் வசிப்பதை உறுதி செய்து, நிறுத்தி வைக்கப்பட்ட ஓட்டு எண்ணிக்கையை, இன்று மேற்கொள்ள வேண்டும்.ஓட்டு பெட்டிகளை, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்திலிருந்து, காலை, 9:30 மணிக்கு, பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்து சென்று, ஓட்டுகளை எண்ணி, தேர்தல் முடிவை வெளியிட வேண்டும்.

தேர்வு செய்யப்படுவோர், 10ம் தேதிக்கு முன்னதாக, பதவியேற்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X