பொது செய்தி

இந்தியா

ஊக்க மருந்து: பளுதூக்கும் வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக பளு தூக்கும் வீராங்கனை சரப்ஜீத்துக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



பஞ்சாப்பை சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனையான சரப்ஜித் கவுர், கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த பெண்களுக்கான தேசிய பளுதூக்கும் போட்டியில் 71 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.
இப்போட்டியின் போது இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு, சரப்ஜீத் கவுரின் ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்து, விசாரணை நடத்தி வந்தது. இந்த சோதனையில் இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது.


latest tamil news



இந்நிலையில் இது தொடர்பாக இன்று தனது முடிவை அறிவித்துள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு, சரப்ஜித் கவுர் ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அபராதம் விதிக்க தகுதியற்ற குற்றம் என்பதால் அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. அவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டிருந்தது சோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-ஜன-202016:56:22 IST Report Abuse
Sanny இந்த ஊக்க மருந்தை நம்ம அரசியல்வாதிகளுக்கு கொடுக்கணும், அப்போதான் இவங்க தங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களை அடிக்கடி சந்தித்து குறைகளை உச்சகமாக சரிசெய்து கொடுப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X