பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜன 08, 2020
Advertisement

சுகாதார வளாகத்தை சுத்தம் செய்யணும்! கரூர், பஸ் ஸ்டாண்டில், இலவச கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதை, ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆதை நாள்தோறும் சுத்தம் செய்வது இல்லை. இதனால், துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பயணிகள் பல்வேறு தொற்று நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, சுகாதார வசதியை மேம்படுத்த, நகராட்சி சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி.மோகன், கரூர்.

அடிப்படை வசதி தேவை: கரூர் அடுத்த, நெரூர் பிரமேந்திராள் கோவில் மற்றும் அக்னீஸ்வரர் கோவில் அருகே, காவிரி ஆறு செல்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் குளித்து விட்டு செல்கின்றனர். இப்பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா மற்றும் ஆண்கள், பெண்கள் உடை மாற்றும் அறைகள் உள்ளன. ஆனால், அவை போதிய பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

- டி.பிரகாஷ், வேடிச்சிபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X