பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்: தனியார் மையங்களுக்கு சாதகம் என குற்றச்சாட்டு

Added : ஜன 08, 2020
Advertisement

கரூர்: அரவக்குறிச்சி அஞ்சலகத்தில், ரயில் டிக்கெட்டு முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி டவுன் பஞ்சாயத்து பொதுமக்கள், வெளிமாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். சிலர் வேலையிலும் உள்ளனர். இவர்கள் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய, 35 கி.மீ., தூரம் உள்ள கரூர் ரயில்வே ஸ்டேஷன் செல்ல வேண்டும். இதனால், அஞ்சலகத்தில் ரயில்வே டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு என்ற திட்டத்தின் கீழ், அரவக்குறிச்சியில் முன் பதிவு செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 2012 செப்டம்பர் மாதம், அரவக்குறிச்சி அஞ்சலகத்தில், ரயில்வே டிக்கெட் முன்பதிவு துவக்கப்பட்டது. நாள்தோறும், 30க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கும், அஞ்சலகத்துக்கும் வருவாய் கிடைத்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ரயில்வே டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அரவக்குறிச்சி அஞ்சலகத்தில், ஆறு ரயில்வே டிக்கெட் வரை பெற, 15 ரூபாய் தான் கமிஷனாக செலுத்தினோம். ஆனால், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் செயல்பட்டு வரும், 10க்கும் மேற்பட்ட தனியார் மையங்களில், ஒரு டிக்கெட் பெற, 200 முதல், 300 ரூபாய் கமிஷன் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆன்லைன் மூலம் ரயிலில் இட வசதி உள்ளதா என தெரிந்து கொண்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்குள், புக்கிங் ஆகி விடுகிறது. தனியார் சேவை மையங்களுக்கு சாதகமாக, இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. ரயில்வே டிக்கெட் முன்பதிவை மீண்டும் துவக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். அஞ்சலக ஊழியர்கள் கூறுகையில், 'எவ்வித முன்னறிவிப்புமின்றி, ரயில்வே துறை சார்பில் முன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தபால் நிலையத்துக்குதான், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X