பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறள் பேரவை 34ம் ஆண்டு விழா

Added : ஜன 08, 2020
Advertisement

கரூர்: கரூரில், திருக்குறள் பேரவை, 34ம் ஆண்டு விழா நடந்தது. சிறந்த நூல் போட்டியில், 'காந்தி வந்தால் ஏந்தும் கருவி' என்ற நூலுக்கு இரண்டாம் பரிசை பெற்றுகொண்டு, புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் கிருங்கை சேதுபதி பேசியதாவது: தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு திருக்குறள் என்பதுதான், அவருக்கு அடிநாதமாக இருந்தது என்பது வரலாறு. அந்த வழியில் நாம் தெரிந்துகொள்வது, 'பொய் சொல்ல மாட்டேன்' என, திருக்குறள் வழியில் வாழ்ந்து காட்டியவர், வா.சுப. மாணிக்கனார். இளம் வயதில் வறுமை தீர பர்மாவுக்குச் சென்று, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். சோதனைக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகளிடம் நிறுவன உரிமையாளர் தன்னை காட்டிக் கொடுக்கக் கூடாது எனக் கூறியபோது, வாழ்க்கைப் போராட்டத்தில் வேலை முக்கியமா, வள்ளுவம் முக்கியமா என்ற மனப் போராட்டம் அவருக்கு ஏற்பட்டது. முடிவில் வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு, வள்ளுவ வழியில் பொய் சொல்லாமல் வாழ்ந்தவர் மாணிக்கனார். அவரது வழியை இன்றைய தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X