பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கரூர் வந்த 'சைக்கிள் கிளப்' குழுவினர்

Added : ஜன 08, 2020
Advertisement

கரூர்: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, காஷ்மீர் முதல் கன்னி யாகுமரி வரை, சைக்கிளில் செல்லும் குழுவினர் நேற்று கரூர் வந்தனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம், பராமதி சைக்கிள் கிளப் குழுவை சேர்ந்த, நான்கு பெண்கள் உள்பட, எட்டு பேர் கடந்த மாதம், 12ல் காஷ்மீரில் இருந்து சைக்கிளில், கன்னியாகுமரி வரை செல்ல (தேசிய நெடுஞ்சாலை வழியாக ) பயணத்தை துவக்கினர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த குழுவினர் நேற்று காலை, 11:00 கரூர் மண்மங்கலத்துக்கு வந்தனர். அவர்களை கரூர் மேற்கு மண்டல, பா.ஜ., தலைவர் கோபிநாத், இளைஞரணி தலைவர் கதிரேசன் மற்றும் தீனசேகரன் ஆகியோர் வரவேற்றனர். பயணம் குறித்து குழு தலைவர் சஞ்சய் சாம் பாஜி தர்டே கூறியதாவது: நாங்கள் எட்டு பேரும், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் மதிப்புள்ள, அதிநவீன வேகமாக செல்லும் சைக்கிள் மூலம் பயணம் செய்கிறோம். வரும் ஜனவரி, 10ல் கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை மட்டும், தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வோம். அந்த பகுதிகளில், பொதுமக்கள் கூடும் இடங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்து கிறோம். மொழி பிரச்னை இருப்பதால், சமூக சேவை சங்கங்கள் மூலம், உள்ளூர்வாசிகளை உதவிக்கு அழைத்துக் கொள்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார். இதையடுத்து, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி வழியாக, கன்னியாகுமரிக்கு, எட்டு பேரும் புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X