சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல் மனைவிக்கு மிரட்டல்: மாஜி ராணுவ வீரர் மீது வழக்கு

Added : ஜன 08, 2020
Advertisement

கரூர்: கரூர் அருகே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, முதல் மனைவியை மிரட்டியதாக, முன்னாள் ராணுவ வீரர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 37; முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும், குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த, சண்முக சுந்தரி, 29, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன், குழந்தை பெயரில் டிபாசிட் செய்ய, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை பிரபாகரன், மாமியார் சுசீலா, 50, உறவினர் கவிதா, 28, ஆகியோர், சண்முக சுந்தரியிடம் கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் பிரபாகரனை பிரிந்து, சண்முக சுந்தரி வாழ்ந்து வருகிறார். கடந்த மே மாதம், ராஜம் என்ற பெண்ணை, பிரபாகரன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறி, சண்முக சுந்தரி தட்டி கேட்டுள்ளார். அப்போது பிரபாகரன், சண்முக சுந்தரியிடம் தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, சண்முக சுந்தரி கரூர் ஜேம்.எம்.-1 நீதிமன்றத்தில் நவ., 13ல் புகார் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதை யடுத்து, பிரபாகரன், சுசீலா, கவிதா ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X