சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி: தி.மு.க.,வினர் எதிர்ப்பால் பரபரப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

கரூர்: கரூரில், ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரூர், நகராட்சி மேல்நிலைப்பள்ளியையொட்டியுள்ள பகுதியில், குறிப்பிட்ட அளவுகளில் பெட்டி வைத்து வியாபாரம் செய்து கொள்ள, நகராட்சி நிர்வாகம் சிலருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், நிர்ணயித்த அளவுக்கு மேல், ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டியதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று மதியம், 12:00 மணிக்கு நகரமைப்பு அலுவலர் அன்பு தலைமையிலான ஊழியர்கள், ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கட்டடங்களை அகற்றினர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டு, பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடிக்க முயன்றனர். அவர்களை, போலீசார் சமரசம் செய்து அழைத்து சென்றனர். தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகியின் கடை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற, நகராட்சி ஊழியர்கள் தயாராகினர். தகவலறிந்த, தி.மு.க.,வினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். பிறகு அவர்கள், நகராட்சி அதிகாரிகளிடம், 'கடையில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள, கரூர் நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், பொருட்களை அகற்றக் கூடாது' எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 'நீதிமன்ற அனுமதி பெற்று, ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' என, கூறிவிட்டு நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X