கிடப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி பொதுமக்கள், ஓட்டுனர்கள் அவதி

Added : ஜன 08, 2020
Advertisement

கரூர்: கரூர் அருகே, போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, புதிதாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
கரூர் டவுன் போலீஸ் சரகத்தில் கரூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், வாங்கல், வெள்ளியணை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், வெங்கமேட்டுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன், அருகம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு, 2013ல் திறக்கப்பட்டது. பழைய சேலம் சாலை மற்றும் அருகம்பாளையம் பிரிவில் இருந்து, 2 கி.மீ., தொலைவில், வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் மயானம் மற்றும் டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், புதிய போலீஸ் ஸ்டேஷனை சுற்றி, அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால், போக்குவரத்துக்குரிய சாலை இல்லை. மண் சாலை மட்டுமே இருந்தது. இதனால், வெங்கமேடு பகுதியில் மழை பெய்யும் போது, போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் மண் சாலை நீரில் முழ்கி விடும். சேறும், சகதியும் நிறைந்த பகுதி வழியாக புகார் கொடுக்க வரும் பொதுமக்களும், பணிக்கு வரும் போலீசாரும் செல்வது வழக்கம். இதையடுத்து, அருகம்பாளையம் பிரிவில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால், பணியை முடிக்காமல், சிமென்ட்டுடன் கூடிய ஜல்லிக்கற்கள் மட்டுமே போட்டுவிட்டு, தார்ச்சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால், நடந்து செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், மழை பெய்யும்போது ஜல்லிக்கற்களுடன் உள்ள, சிமென்ட் கலவை கரைந்து விடுகிறது. எனவே, 'அருகம்பாளையம் பிரிவிலிருந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X